
Friday, November 13, 2009
மோதி விளையாடு

ஐந்தாம்படை

வைகை

தலைஎழுத்து

நடிகர்கள்:
ரிச்சர்ட்ராஜ், பாலாசிங், பாஸ்கர், பக்ரு, கண்ணன், சிவ, ஜெயப்பிரகாஷ் ஆர்.ஆர்.ரெட்டி, எத்திராஜ், பூஜாகாந்தி, மீராகிருஷ்ணன், லட்சுமி
நிறுவனம்: ஜாக் பிலிம் புரொடக்ஷன்ஸ்
தயாரிப்பு, கதை: ரிச்சர்ட்ராஜ், திரைக்கதை, வசனம், இயக்கம்: எத்திராஜ்
ஒளிப்பதிவு: டோம்னிக் சேவியோ, இசை: காட்வின்,
கலை: ரவீந்திரன்,படத்தொகுப்பு: ஹர்ஷா,
பின்னனி பாடியவர்கள்: ஹரிகரன், கார்த்திக், ரஞ்சித், லாவன்யா, ரம்யா
மக்கள் தொடர்பு: ஜி.பாலன்
அச்சமுண்டு அச்சமுண்டு
அமெரிக்காவில் வசிக்கும் சாப்ட்வேர் எஞ்சினியர் பிரசன்னா. அவருக்கு அழகான மனைவியாக சினேகா, அன்பான மகள் என மகிச்சியுடன் வாழ்கிறார்.
பிரசன்னா வேலைக்கு சென்ற பிறகு சினேகா மகளை பள்ளியில் விட்டுவிட்டு கம்பியூட்டர் கிளாசுக்கு செல்கிறார். அவர்களின் மகிழ்ச்சியான வாழ்க்கையின் நடுவே நல்லவனாக நுழைகிறார் ஜான்ஷே. தோழியின் சிபாரிசில் அவர்கள் வீட்டுக்கு பெயிண்ட் அடிக்க வரும் ஜான்ஷே, நல்லவன் போல நடித்து அந்த வீட்டை நோட்டம் விட்டு பிரசன்னாவின் மகளை பாலியல் வன்முறை நிகழ்த்த வழி வகுக்கிறான்.
திருடன் கையில் சாவி கொடுத்தது போல பிரசன்னா வெளியூர் செல்லும் அன்று அவன் திட்டத்தை முடிக்க முயற்சி செய்கிறான். ஆனால் பிரசன்னா மனம் சரியில்லாததால் பயணத்தை கேன்சல் செய்தவிட்டு வீடு திரும்புகிறார். அப்போது வீட்டில் எதிர்பாரத சம்பவம் நிகழ்கிறது. அது என்ன என்பது பரபரப்பான கிளைமாக்ஸ்.
சிறு குழந்தைகளை கடத்தி பாலியல் வன்முறை செய்யும் குற்றவாளியை பற்றிய கதை. அதை குடும்ப வாழ்க்கை, பாசம், பயம் என பலசவையான சம்பவங்களோடு படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர்.
அப்படி ஒரு அந்நியோன்யமான, பாசமான கணவன் மனைவியாக வாழ்ந்திருக்கின்றனர் பிரசன்னாவும், சினேகாவும். அவர்களுக்கிடையில் உருவாகும் தொட்டுத் தொடரும் ஊடல்களும் பட்டுப் படரும் கூடல்களும் சின்ன சின்ன கவிதைகள் போல ரசிக்க வைக்கிறது. பிரசன்னாவின் வார்த்தைகளில் தெறிக்கும் குட்டிக் குறும்புகள் ரசித்து சிரிக்க வைக்கிறது.
நல்லவனாக நடிக்கும் போது நல்லவனாகவும், கெட்டவனாக நடிக்கும்போது கெட்டவனாகவும் தெரிவது என நடிப்பில் ஜான் ஷே அசத்தியிருக்கிறார். சோகம் கலந்த அந்த சிறுமியின் நடிப்பும் பலே.
முதல் பாதியில் பாசமும் ஆசையமாக படத்தை நகர்த்தும் இயக்குநர் வைத்தியநாதன், இரண்டாம்பாதியை பயமும் பதட்டமுமாக படத்தை கொண்டு சென்று முடிக்கிறார். கடைசி இருபது நிமிட பரபரப்பு காட்சிகளில் சீட்டில் கட்டிப் போடுகிறார். பிரசன்னா, சினேகா இருவர் திறமையையும் அவர் வாங்கியிருப்பது அவரது திறமையை காட்டுகிறது.
ரெட் ஒன் கேமிரா மூலம் படத்தை எடுத்திருக்கின்றனர். படம் முழுவதும் அமெரிக்காவில் எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு காட்சியும் கண்ணுக்குள் ஒத்திக்கொள்வது போல படமாக்கியிருக்கின்றனர். கார்த்திக்ராஜாவின் இசையில், "கண்ணில் தாகம்" பாடல் ரொம்பவே மனதை மயக்குகிறது.
பெற்றவர்கள் பிள்ளைகள் மீது பாசத்தை மட்டுமல்ல பாதுகாப்பையும் தரவேண்டும் என்று சொல்கிறது அசச்சமுண்டு. பொறுமையோடு பார்க்க வேண்டிய அழகான படம். அட்வைஸ் உள்ள படம்.
காதல் கதை
சாதி கெளரவம் பார்க்கும் முன்னாள் எம்.எல்.ஏ. தனது ஆசைக்கு மட்டும் சாதி கெளரவம் பார்ப்பதில்லை. தன்னிடம் நன்றியோடு வேலைபார்க்கும் தொழிலாளியின் மனைவியோடு கள்ள காதலில் ஈடுபடுகிறார். அதை நேரில் பார்த்து கண்டிக்கும் அந்த தொழிலாளியை கொலை செய்கிறார். அவரது மகன் கீழ் சாதி பெண்ணுக்கு உதவுவதோடு அவளை காதலிக்கவும் செய்கிறான். இது தெரிந்ததும் அவர்களது காதலுக்கு சமாதி கட்டுவதோடு அந்த பெண்ணையும் கொள்கிறார் தந்தை.
அதே கிராமத்தில் பள்ளி பருவத்திலேயே ஒரு மாணவனால் காதல் மயக்கத்தில் கர்ப்பமாகி கைகுழந்தையுடன் வாழாவெட்டியாகும் தங்கம், திரும்பவும் பள்ளி ஆசிரியரிடம் ஏமாந்து நிற்கிறாள். இவளையும் அனுபவிக்க நினைக்கிறார் அந்த முன்னாள் எம்.எல்.ஏ.
அந்த கிராமத்துக்கு படப்பிடிப்புக்காக செல்லும் இயக்குநர் வேலுபிரபாகரன் இந்த மூன்று சம்பவங்களையும் அறிகிறார். இந்த மூன்று சம்பவத்திற்கும் அடிப்படை காரணம் காமம்தான் என்பதை உணரும் அவர் அதை பத்திரிகை நிருபருக்கு தனது பேட்டியாக தெரிவிக்கிறார். அதில் தனது காதலையும், வாழ்க்கை அனுபவங்களையும் சொல்வதோடு பாலியல் பலாத்காரம் மற்றும் பாலியல் வன்முறை அதிகரிக்க காரணம் நமது மூடும் நம்பிக்கைகளே என்று முடிவு சொல்வதோடு அதை களைந்தால் மூட நம்பிக்கை களைந்து நம்முடைய சக்தி ஆக்க பூர்வமாக பயன் படுத்த முடியும் என முடிவு சொல்கிறார்.
காமத்தை திறந்த புத்தகமாக்க வேண்டும் என படம் சொல்கிறது. அதை காதலும், மோதலும், காமம் நிறைவேறும் சம்பவங்களோடும் படமாக தந்திருக்கிறார் இயக்குநர் வேலுராஜா.
ஏழை கணவனை ஏமாற்றி, பணக்காரரின் ஆசை நாயகியாக வாழ்ந்து, கணவனை கொலை செய்ய உடந்தையாகும் பாபிலோனா. பாலியல் கவர்ச்சியை காதலாக நினைத்து, உயர் ஜாதி இளைஞனை காதலித்து கொலையாகி சாகும் ஷெர்லிதாஸ், முதலில் சகமாணவனாலும், பிறகு ஆசிரியராலும் ஏமாறும் தங்கம் பாத்திரத்தில் பிரீத்தி ரங்கயானி ஆகியோர் தாராளமாக நடித்திருக்கின்றனர்.
வேலுபிரபாகரன் இயக்குநராக, தயாரிப்பாளராக நடித்திருக்கிறார். சரத்செந்தில், ரத்தன், ஜெய், அதிரூபன், சம்பத் ஆகியோரின் நடிப்பும் பலே.
பரபரப்பான மோதலும், கிளுகிளப்பான காட்சிகளும் படத்தில் இறைந்து கிடக்கின்றன. அதில் இளையராஜாவின் இசையும், வேலுபிரபாகரனின் வசனமும் பலம் சேர்க்கிறது.
வெடிகுண்டு முருகேசன்
மிலிட்டரிகாரர் மகன் பசுபதி. கடைகளுக்கு வண்டியில் பேரல் வைத்து தண்ணீர் சப்ளை செய்பவர். அவர் மனதுக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அது தவறாக இருந்தாலும் அதை தைரியமாக செய்வார். இதனால் போலீஸ், கோர்ட் என்று செல்வதும் வாடிக்கை. பசுபதியின் பள்ளி தோழி தீபா மனநிலை பாதிக்கப்பட்டு வீட்டுக்கு பாரமாக இருப்பதால் அவரை கொல்ல முயற்சிக்கிறார் அவரது தந்தை. அதனால் தீபாவை தன்னோடு அழைத்து வந்து பாதுகாக்கிறார் பசுபதி.
அந்த ஊரில் தாதாவாக இருக்கும் வீராவின் தம்பி ரனிஷ், கோழி குருடாக இருந்தாலும் குழம்பு ருசியாக இருந்தால் போதும் என்று கிடைக்கிற பெண்களையெல்லாம் தனது வக்கிரங்களுக்கு பயன் படுத்துவார். அப்படி ஒரு நாள் பசுபதி அசந்த நேரம் பார்த்து மனநோயளி தீபாவை தனது காம பசிக்கு இறையாக்குகிறார் ரனிஷ். இதை அறியும் பசுபதி ஆத்திரத்தில் அவனை அடிக்க அவன் எதிர்பாரதவிதமாக செத்துபோகிறான். இதனால் கொலை பழி பசுபதி மீது விழுகிறது. அந்த கொலைப்பழியிலிருந்தும், தாதாவின் கொலைமுயற்சியிலிருந்தும் தப்பி தனது தோழியை எப்படி காப்பாற்றுகிறார், தனது காதலியை எப்படி கை பிடிக்கிறார் பசுபதி என்பது மீதி படம்.
கருப்பசாமி குத்தகைதாரர் படத்தை நகைச்சுவையுடன் வழங்கிய மூர்த்தி இந்தப் படத்தை கலகலப்புடன் கொடுத்திருக்கிறார். இதில் கிண்டலும் கேலியும், சிரிப்பும் கூத்தும் சிதறி கிடக்கிறது.
கரை படிந்த கைலி, .குறையுள்ள நடை , குதற்கமான பேச்சு என தோற்றத்திலும் நடிப்பிலும் வெளுத்து வாங்குகிறார் பசுபதி. தலைநகரம் படத்தில் வடிவேலுவை பார்த்தது அடிக்கடி மயக்கம் போட்டுவிழும் ஜோதிர்மயி, இதில் பெண் போலீசாக வந்து அழுது அழுத சிரிக்க வைக்கிறார். பாடல் காட்சியில் ஆட்டம் சூப்பர். மனநலம் பாதித்த பொன்னியாக நடித்திருக்கும் தீபா நடையிலும் பேச்சிலும் வித்தியாசத்த காட்டி அந்த குறையுள்ள பெண்ணாகவே பளிச்சிடுகிறார்.
வடிவேலு வெடிவேலுவாக தியேட்டரை சிரிப்பொலியால் அதிரவைக்கிறார். ஆழம் தெரியாமல் காலை விட்டுவது போல போலீஸ்காரரின் பின்பாக்கெட்டில் கையை விட்டு அவர் படும் பாடு தியேட்டரில் அமர்க்களம். ரொம்ப நாளைக்கு பிறகு சிரிக்க வைக்கிறார் வடிவேலு. வீராவின் வில்லன் பில்டப் செம காமெடி. அதே போல ஒரு காட்சியில் வந்தாலும் பாவாலட்சுமணன், முத்துக்காளை வயிறு குலுங்க சிரிக்க வைக்கின்றனர். நீதியதியாக வரும் நிர்மலா பெரியசாமி, அவரது டவாளியாக வரும் அந்த நடிகரும் இயல்பாக நடித்திருக்கின்றனர்.
ராஜபாளையம் பகுதியை தனது கேமிராவில் அள்ளிவந்திருக்கிறார் பாலபரணி. தினாவின் இசையில் யுகபாரதி, ஏக்நாத் எழுதிய பாடல்கள் இனிமை.
திருடன் போலீஸ் விளையாட்டு. அதில் மனித நேயத்தை நேசிக்கும் காதல் என படம் ஆரம்பத்திருந்து முடிவு வரை சீரியசான விஷயத்தையும் சிரிக்க வைத்து ரசிக்க வைதது லாஜிக் பார்க்காமல் மேஜிக் காட்டியிருக்கிறார் இயக்குநர் மூர்த்தி. பசுபதி பாத்திரத்தின் மனித நேயத்திற்காக சின்ன தண்டனையாக மரக்கன்று நட்டு அதில் தண்ணீர் ஊற்ற வைப்பது சூப்பர்.
வெடிகுண்டு முருகேசன் - சிரிப்புவெடி முருகேசன்.