Friday, November 13, 2009

வா‌மனன்‌


சினிமா நடிகராகும் ஆசையில் சென்னை வருகிறார் ஜெய். நண்பன் சந்தானம் அறையில் தங்கி வாய்ப்பு தேடுகிறார். ரெயில் நிலையத்தில் அழகான ப்ரியாவை சந்திக்க காதல்... ரகுமானுடன் நட்பு ஏற்படுகிறது.
ரவுடிகள் தாக்குதலில் காயம் அடையும் மாடலிங் லட்சுமிராயை ஆஸ்பத்திரியில் சேர்த்து காப்பாற்றுகிறார். இருவரும் சினேகம் ஆகிறார்கள். மறுநாள் லட்சுமிராய் வீட்டுக்கு செல்லும் ஜெய் அங்கு அவர் கொலையாகி கிடப்பதை பார்த்து அதிர்கிறார்.
ஜெய் கொலையாளி என போலீஸ் துரத்துகிறது. அரசியல்வாதிகளின் பதவிச் சண்டையில் டெல்லிகணேஷ் கொல்லப்பட அதற்கான வீடியோ ஆதாரம் தன்னிடம் இருப்பதாக கருதி வில்லன் கூட்டமும் போலீசும் பிடிக்க அலைவதை உணர்கிறார் ஜெய். லட்சுமிராயை கொன்றவனையும் கண்டு பிடிக்கிறார்.
ஆதாரத்தை தேடி பிடித்து கொலைப்பழியில் இருந்து எப்படி மீள்கிறார் என்பது கிளைமாக்ஸ்...
ஹீரோயிச சாகசங்கள் செய்யாமல் யதார்த்தமாய் பளிச்சிடுகிறார் ஜெய். நண்பன் காசில் டிரெஸ், செல்போன் என ஜாலி ரவுண்ட் கட்டுவதும் சினிமா கம்பெனிகளில் நடித்து காட்டி திட்டு வாங்கி விரட்டியடிக்கப்படுவதும் ரகளை.
பூட்டிய வீடுகளுக்குள் ரகுமானுடன் நுழைந்து பதறுவதிலும் ப்ரியா மேல் காதல் வலை வீசுவதிலும் அழுத்தம் பதிக்கிறார்.
ப்ரியாவின் தாய் ஊர்வசியை வளைத்துப் போட சந்தானத்தோடு கேமராவுடன் சமையல் குறிப்பு பேட்டி எடுப்பது... கேமரா முன் போஸ் கொடுக்க தெரியாமல் சந்தானத்திடம் திட்டு வாங்கி ஊர்வசி அலறுவது வயிற்றை புண்ணாக்கும் சிரிப்பு.
லட்சுமிராய் கொலையாகி ஜெய்யை போலீஸ் விரட்ட துவங்கியதும் எக்ஸ்பிரஸ் வேகம்... அடுக்குமாடி விளிம்பில் ஜெய், ரகுமான் மோதும் சண்டை காட்சி உதறல்....
டேப் ஆதாரம் தேடும் ரவுடிகளையும் போதை மருந்து கடத்தல் கூட்டத்தையும் நேருக்கு நேர் மோத விட்டு வீழ்த்தும் தந்திரம் பளிச்...
புதுமுகம் ப்ரியா மோதல் பின்பு காதலில் கவர்கிறார். லட்சுமிராய் கவர்ச்சியாக வந்து அநியாயமாய் சாகிறார். கிளைமாக்சை முன்கூட்டி ஓரளவு ïசிக்க முடிவதும் கொலையாளியை அடையாளம் கண்ட பின்பும் மோதாமல் ஜெய் அமைதியாக திரும்புவதும் மைனஸ்.. சந்தானம் காமெடி பெரிய பலம்.
காதல், சஸ்பென்ஸ், ஆக்ஷன் என கதையை விறுவிறுப்பாக நகர்த்துகிறார் இயக்குனர் அஹமத். யுவன் சங்கர்ராஜா இசையும், அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவும் துணை நிற்கின்றன.

No comments:

Post a Comment