மாயாண்டிக்கு நான்கு மகன்களும், ஒரு மகளும். அவரது அண்ணனும் அவரது நான்கு மகன்களும் இவரது குடும்பத்தில் ஒரு உயிரையாவது எடுக்கவும், மோதவும் எப்பவும் தயாராக இருப்பவர்கள். அதற்கு ஏதாவது காரணம் கிடைக்காதா என அலைவார்கள்.
மாயாண்டியோ தன் குடும்பம் சேர்ந்திருக்க வேண்டும், தன் மகன் மட்டும்மல்லாது தனது அண்ணன் மகன்களும் நலமாக இருக்க வேண்டும் என எண்ணம் உள்ளவர். இந்த நிலையில் அவர் மின்சாரம் தாக்கி இறந்து போக, அவர் வாழ்ந்த வாசம் மறைவதற்குள் அவரது குடும்பம் நான்காக உடைந்து போகிறது, இந்த விரிசலையும், பகையையும் கடைசி மகன் பரமு எப்படி சேர்த்து வைக்கிறான் என்பது மீதி படம்.
பாசமுள்ள சகோதரர்கள் இந்தப்படத்தைப் பார்த்தால் நல்ல அனுபவம் கிடைக்கும். அதே போல தந்தையை இழந்தவர்கள், அவரது ஞாபகமாக ஒருவருக்கு ஒருவாய் சோறாவது வாங்கிப்போடுவார்கள் அப்படிப்பட்ட பாசமுள்ள படைப்பு மாயாண்டி குடும்பம்.
இதில் மாயாண்டியாக வாழந்து மறைந்திருந்தார் மணிவண்ணன். அவரது சின்னமகன் பரமுவாக வரும் இயக்குனர் தருண்கோபி தனது பன்பட்ட நடிப்பாற்றலை வெளிப்படுத்தி நம் உணர்வுகளோடும், பாசத்தோடும் விளையாடியிருக்கிறார். தந்தை இறக்கும் போது சீமான் நடிப்பும், தம்பிக்கு புரோட்டா வாங்கி தரும் போது பொண்வண்ணன் நடிப்பும். தந்தைக்காக அழும்போது ஜெகன்நாத் நடிப்பும் பலே.
தாய்மாமானாக வரும் இளவரசு, மயில்சாமி இருவருக்கும் சல்யூட் போட வைக்கின்றனர். அற்புதமான பாத்திர படைப்பு. அதே போல லூசாக திரியும் சிங்கம் புலி நடிப்பும் பிரமாதம். சண்டைக்கு வா வாவென அழைக்கும் ரவிமரியா. நந்தாபெரியசாமி நடிப்பும், மிரளவைக்கிறது. கோபத்தை முகத்தில் காட்டும் ஜி.எம்.குமார், ராஜ்கபூர் நடிப்பும் எடுபடுகிறது.
பத்து இயக்குனர்களை தேர்வு செய்து அவர்களுக்கு நல்ல கதாபாத்திரங்களை கொடுத்து நடிக்க வைத்திருப்பதோடு, சண்டைபாதி, பாசம் பாதி என நினைக்க வைக்கிறார் ராகமதுரவன் பத்திரிகையில் பேர்போடாமல் அவமானப்படுத்தும் அக்காள் கணவனை, பாசத்தை காட்டி திருந்த வைக்கிற ஒரு சீனே படத்துக்கு பெரியபலம்.
சபேஷ்முரளி இசையில் நெஞ்சில் ஈரமும், வீரமும் விளைகிறது. மதுரையருகே உள்ள ஒரு கிராமத்தில் நாமும் வாழ்ந்த அனுபவத்தை தருகிறது பாலபரணி ஒளிப்பதிவு. மாயாண்டி குடும்பத்தார் டச்சிங் டச்சிங்.
No comments:
Post a Comment