Tuesday, September 1, 2009

நீ‌ உன்‌னை‌ அறி‌ந்‌தா‌ல்‌


துரோகியான நண்பனை பழிவாங்கும் இளைஞன் கதை.

முரளியும், ரிஷிராஜும் நண்பர்கள். மீன் பாடி வண்டியில் லோடு ஏற்றி பிழைப்பு நடத்துகிறார்கள். இருவரும் ஒரே வீட்டில் வசிக்கின்றனர். அவர்களுக்கு ஒரே மேடையில் திருமணம் நடத்த முரளி தாய் விரும்புகிறார். ஆனால் ரிஷி சதா போதையில் திரிவதால் அவரை மணக்க யாரும் முன்வரவில்லை.

முரளி மட்டும் முறைப்பெண் குஷியை திருமணம் செய்கிறார். ஒரு கட்டத்தில் குடித்து போதையில் வரும் ரிஷிராஜ் வீட்டில் தனியாக இருக்கும் குஷியை பலாத்காரம் செய்து மானபங்கப்படுத்தி கொலை செய்கிறார்.

ரிஷியை முரளிபழி வாங்குவது கிளை மாக்ஸ்...

முரளி, ரிஷி குடிசை பகுதி நண்பர்களாக அழுக்கு உடம்பில் கச்சிதமாக பொருந்துகின்றனர். முரளி, குஷி முதலிரவு கிளு கிளு. குஷி கொலையுண்டதும் கதறி சுடு காட்டில் மனைவியை புதைத்த இடத்தில் ஒப்பாரி வைத்து சோகபடுத்துகிறார். மனைவியை சாகடிதத்தது ரிஷிதான் என வேலைக்காரன் சொல்ல என் நண்பன் மீதே பழி சுமத்துகிறாயா என்று அவனை ஆவேசமாக அடித்து நொறுக்கி நட்பின் வீரியம் காட்டுகிறார்.

குடிகார ரிஷி வில்லத்தனத்தில் மிரட்டுகிறார். நண்பன் மனைவியை கற்பழித்து சாகடிப்பது திக். விலை மாதுவிடம் நடத்தும் களியாட்டங்கள் வெறுப்பேற்றும் வக்கிரம். ஆர்.கே.சுந்தர் இசையில் ஒத்த ஒத்த பாடல் இனிமை.

No comments:

Post a Comment