
நிறுவனம்: சி.டி பிலிம்ஸ்
தயாரிப்பு: ஆர்.சின்னசாமி, கோவைதர்மன், பி.சின்னத்துரை, விஐபி.சாமி
இயக்கம்: சர்வதீர்த்தவன் இசை: ஆழ்வார் ஸ்ரீ
நடிப்பு: குரு, ஆஷா, மாளவிகா, சாரா, கஞ்சா கருப்பு, மயில்சாமி, முத்துக்காளை, தென்னவன், பெஞ்சமின், கொட்டாச்சி
பாடல்கள்: கபிலன் சண்டைப்பயிற்சி: தவசிராஜ்
நடனம்: ரவிதேவ், கல்யாண், அஜய்ராஜ்
கலை: வினோத் ஒளிப்பதிவு: வில்லாலன்
படத்தொகுப்பு: சுரேஷ்ராஜன் தயாரிப்பு நிர்வாகம்: எம்.பி.ஆறுமுகம் மக்கள்தொடர்பு: கோவிந்தராஜ்
குரு புகழ் பெற்ற புகைப்பட கலைஞன். அவனுக்கு அதிக சம்பளம் கொடுத்து வேலைக்கு அமர்த்துகிறார் மாடலிங் ஸ்டுடியோ முதலாளி. அதனால் மாடலிங் ஸ்டுடியோவில் கூட்டம் கலைகட்டுகிறது. உடைமாற்றும் அறையில் ரகசிய கேமிரா வைத்து பெண்களின் நிர்வானத்தை ரசிக்கிறான் ஸ்டுடியோ முதலாளி.
இதில் புகைப்பட கலைஞனின் காதலியும் ரசிக்கப்படுகிறாள். அவளிடம் தவறாக நடக்க முயல்கிறான் முதலாளி. தனக்கு உடன்படவில்லை என்றால் பதிவு செய்து வைத்திருக்கும் நிர்வாண காட்சிகளை இண்டர்நெட்டில் வெளியிடுவேன் என மிரட்டுகிறான். இதனால் நடந்த தள்ளு முள்ளுவில் ஸ்டுடியோ முதலாளி கத்தி குத்துப் பட்டு சாகிறான்.
இவன் தான் இப்படி என்றால் இவனது தந்தை, அனாதை ஆஸ்ரமம் நடத்துகிறேன் என்று அங்கு இருக்கும் சிறுமிகளை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கி சாகடிக்கிறான். மகன் இறந்த சம்பவத்தை கேள்விப்பட்டு, அதுக்கு காரணமான புகைப்பட கலைஞன் குருவை போலீஸ் உதவியோடு ஆட்கள் வைத்து கத்தியால் குத்தி சேற்றில் வீசுகிறான்.
உயிர் பிழைக்கும் குரு, தனது காதலியை காப்பாற்ற அயோக்கியனை அழிக்கிறான். புதுமுகம் குரு சண்டைக் காட்சிகளில் கைதட்டலை அள்ளுகிறார். அவரது காதலியாக வரும் ஆஷா, எதர்த்த நடிப்பால் நெஞ்சை தொடுகிறார். ஒரு பாட்டுக்கு வந்த கெட்டகெட்ட பையன்டா என பாட்டு பாடி ஆடுகிறார் மாளவிகா.
செல்போன் திருடும் மயில்சாமி நகைச்சுவை சிரிப்பொலி. டைரக்டராக முத்துக்காளையிடம் அடிவாங்கும் கஞ்சா கருப்பு கலகலப்பூட்டுகிறார்.
கொடைக்கானல் காட்சிகளில் செம பரபரப்புடன் படத்தை தந்திருக்கிறார் புதியவர் கே.பி.சர்வதீர்த்தவன்.
No comments:
Post a Comment