
திரைக்கதை, வசனம், இயக்கம்: லட்சுமி காந்தன்
இசை: விஜய் ஆன்டனி ஒளிப்பதிவு: குருதேவ்
மக்கள்தொடர்பு: செல்வ ரகு
நடிகர்கள்: பசுபதி, அஜ்மல், சிம்ரன், மீனாட்சி, ராஜேந்திர பிரசாத், மனோபாலா, வெங்கட்ரமணி,
நிலையில்லாத வேலையில் இருக்கும் கார் டிரைவர் பசுபதிக்கும், தந்தை சொத்தை தனதாக்க முயலும் அஜ்மலுக்கும் இடையே நடக்கும் பிரச்சனையே 4777 படத்தின் கதை. அதை கோபம், மோதல், பழிவாங்கல் என இழுத்த கடைசியில் இருவரும் பணத்தை விட மனித நேயமே பெரிது என உணர வைக்கிறது படம்.
டாக்சி டிரைவராக , பொய்யும், குடியும், சண்டையும், மனைவியிடம் கெஞ்சலுமாக படம் முழுக்க ஓட்டியிருக்கிறார் பசுபதி. பல இடங்களில் அவரது எதார்த்தமான நடிப்பு பளிச்சிடுகிறது. போலீஸ் ஸ்டேஷன் காட்சிகளில் சிரிக்கவைக்கிறார். பள்ளியில் மகனை பார்க்கிற போது அழ வைக்கிறார்.
சில பணக்கார வாலிபர்கள் மற்றவர்களை மதிப்பதில்லை. தன் சுயநலத்துக்காக என்ன வேண்டுமானலும் செய்வான் என்பதை அஜ்மல் உணர வைக்கிறார். அவர் லாக்கர் சாவியை தேடி அலைவதும் அதற்காக கோபப்படுவதும்தான் வேலை.
எதிர்பார்ப்புள்ள குடும்பத் தலைவியாக சிம்ரன். நடுத்தர ஏழை குடும்பத்தின் பிரச்சனைகளை தனது முகபாவ பேச்சால் பதியவைத்துள்ளார். பாவம் மீனாட்சி. பாடல்காட்சிகளுக்கு மட்டுமே பயன் பட்டிருக்கிறார். ராஜேந்திர பிரசாத், மனோபாலா நகைச்சுவை காட்சிகள் சிரிப்பொலி. நல்ல கார்டியனாக வெங்கட்ரமணி நடித்திருக்கிறார்.
நடிகர் ஜீவா ஆரம்பத்தில் கதையை சொல்லிப்போற அழகு அருமை. கார் ஓடுவது போல குருதேவ் கேமிரா ஓடியிருக்கிறது. விஜய் ஆண்டனி இசையில் ஆத்திச்சூடி பாடல் ரசிக்க முடிகிறது. பின்னனி இசையில் ஒரு குரல் கேட்டுக்கொண்டே இருப்பது இதம்.
இந்திப் படத்தை தமிழுக்காக ரீமேக் செய்திக்கிறார்கள். அதை ஜீவாவின் சிஷ்யர் லட்சுமிகாந்தன் இயக்கியிருக்கிறார். காட்சிகளில் ஒட்டம் இருந்தாலும் கதை அழுத்தம் இல்லாததால் படம் பார்க்கிற உணர்வை தந்திருக்கிறார்
No comments:
Post a Comment