
நிறுவனம்:ராஜஸ்ரீ பிலிம்இன்டர்நேஷனல் தயாரிப்பு: நீலா
நடிப்பு: வி.என்.ஆர், அக்ஷயா, புவனேஸ்வரி, கதிர்ராஜ்
இயக்கம்: ஆர்.கணபதி இசை: மணிசர்மா
ஒளிப்பதிவு: ரவிசங்கர் படத்தொகுப்பு: உதயசங்கர்
சண்டைப்பயிற்சி: ராம்லக்ஷ்மணன்
பாடல்கள்: யுகபாரதி, சினேகன், விவேகா, விஜயசாகர்
மக்கள் தொடர்பு : திரைநீதி செல்வம், கோவிந்தராஜ்
வங்கியில் பணிபுரியும் கஜா பெண் பித்தன். திருமணமான பெண்களின் மச்சத்தை வைத்து அவர்களின் பலம் பலவீனத்தை தெரிந்து கொண்டு கவிழ்ப்பவன்.
அப்படி அவனிம் ஏமாந்த வங்கி மேனஜர் மனைவி தனது தவறுக்காக வருத்தம் தெரிவிப்பதோடு கணவனோடு நெருப்புக்கு இறையாகிறாள். அதை மறக்க அவன் வெளியூர் சென்று போதையில் மனதை தேற்றுகிறான்.
அதன் பிறகு திருந்திவிட்டான் என்று பார்த்தால் வேதாளம் முருங்கை மரம் எறிய கதையாக மறுபடியும் புதிதாக சேர்ந்திருக்கும் மேனஜரை நண்பராக்கி அவர் மனைவியை அடைய ஆசைப்படுகிறான். இவனது கிறுக்கு புத்தியை அறிந்த பூஜா கணவனிடம் அவனைப் பற்றி கூறுகிறாள். கணவனோ நம்ப மறுக்கிறான். கடைசியில் பெண்களை அழித்தவன் பெண் கையாலே பழியாகிறான். அது எப்படி என்பது மீதி படம்.
முதல் பாதியில் அஜால் குஜால் படம் போல நிறைய காட்சிகள். இரண்டாம்பாதியில் குடும்ப பெண்ணுடன் மோதுகிற போது பரபரப்பு தொற்றிக்கொள்ளும் படம்
கஜாவாக வி.என்.ஆர். நடித்திருக்கிறார். அவர் படம் முழுக்க வந்தாலும் எந்த எரிச்சலும் இல்லாமல் அவரை பார்க்க வைக்கிறார். அவரது பேச்சும் நடிப்பும் பலே. அவரே கணேஷ் என்கிற வங்கி மேனஜர் பாத்திரத்திலும் நடித்திருக்கிறார். கஜாவுக்கும், கணேஜூக்கும் வித்தியாசத்தை கொடுத்திருக்கிறார். அதுக்காக ஓவர் அமைதியான கேரக்டர். பாடல் காட்சிகளில் செம ஆட்டம் போட்டிருக்கிறார்.
கலாபக்காதலன் படத்தில் அக்காவின் கணவன் மீது ஆசைப்படும் பாத்திரத்தில் நடித்து வெளத்துக்கட்டியவர், இதில் அதற்கு எதிரான வேடத்தில் கலக்கியிருக்கிறார் அக்ஷயா. கோபப்படும் காட்சிகளில் அவரது முகபாவங்களில் அற்புதமான நடிப்பு. பாடல்களில் பரவச மூட்டுகிறார்.
கஜாவின் ஆசைக்கு பலியாகும் பாத்திரத்தில் வரும் வங்கி மேனஜர் மனைவி உமாதேவியின் அழகை பரிவை ஏற்படுத்துகிறது. ஒரு பாடலுக்கு வற்து குத்தாட்டம் போட்டிருக்கிறார் புவனேஸ்வரி. ஆலோசனை சொல்லும் நல்ல நண்பராக நடித்திரக்கிறார் கதிர்ராஜ்.
மணிசர்மாவின் இசையில் பாடல்கள் பரவா இல்லை ரகம். ஏவி.ரமணன், ரோஜா பாடிய தொட்டுவிட தொட்டுவிட ரீமிக்ஸ் பாடல் ரசிக்கும் படி உள்ளன. அதனை படமாக்கிய விதமும், ஆட்டிவித்த விதமும் தொகுக்கப்பட்ட விதமும் அருமை. அதற்காக காஸ்டியூமர் ரமேஷ், மேக்கப் மேன் கிருஷ்ணா, கேமிராமேன் ரவிசங்கர், எடிட்டர் உதயசங்கர், டான்ஸ் மாஸ்டர் தாரா ஆகியோரை தாராளமாக பாராட்டலாம்.
ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் ஆலோசனை வழங்கும் கதையை பொழுதுபோக்கு அம்சங்களுடன் தந்திருக்கிறார் அறிமுக இயக்குநர் கணபதி. காம மன்னனின் ஆசை லீலைகள் கஜா
No comments:
Post a Comment