
நிறுவனம்: திருப்பதி பிரதர்ஸ் மீடியா பி லிட்
தயாரிப்பு:என்.சுபாஷ் சந்திரபோஸ்
இணைத்தயாரிப்பு: ஜி.ஆர்.வெங்கடேஷ்
இயக்கம்: ரோஹன்கிருஷ்ணா இசை: ஜாஸி கிப்ட்
நடிப்பு: நதியா, கே. பாலகிருஷ்ணன், மோனா.பழனிச்சாமி,
கதை: ஷிபா ரோஹன் வசனம்: மோனா. பழனிச்சாமி
பாடல்கள்: நா.முத்துக்குமார், யுகபாரதி, நெல்லைபாரதி
நடனம்: பிருந்தா, தினேஷ், செல்வி
சண்டைப்பயிற்சி: தவசிராஜ் கலை: சஞ்சய் கரண்
ஒளிப்பதிவு: கிருஷ்ணசாமி படத்தொகுப்பு: சசிக்குமார்
தயாரிப்பு நிர்வாகம்: கே. பாலகிருஷ்ணன்
மக்கள்தொடர்பு: ஜான்சன்
ஒரு அழகான மேல்நிலைப்பள்ளி. அதன் கரஸ்பாண்டென்ட் நதியா. அங்குள்ள மாணவ, மாணவிகளிடம் அன்பாக பழகக் கூடியவர். இருந்தும் அந்த பள்ளி மாணவர்களில் எட்டுபேர், இரு குழுவாக இருந்துகொண்டு மோதிக்கொண்டு வேதனைப்படுத்துகின்றனர். அவர்களுக்கு அன்பாக பலவிதமான தண்டனைகள் அளித்தும் பலன் இல்லாமல் போகிறது.
இந்த நிலையில் பள்ளிகளுக்கிடையே நடக்கும் விளையாட்டு போட்டியில் தோல்வியை தழுவி யார் மேல தவறு என மோதிக்கொள்கின்றனர். அன்பால் திருத்த முடியும் என்ற அவரது நம்பிக்கையை பொய்யாக்குகின்றனர். இதனால் கோபமடையும் நதியா, போட்டியில் இருந்து விலகிக் கொள்ள முடிவெடுக்கிறார். இந்த சம்பவம் மாணவர்களை பாதிக்கிறது.
ஒன்று பட்டு கடுமையான பயிற்சி எடுத்து போட்டியில் வெற்றி கனியை பறித்து அன்பால் வெல்லாம் என்ற நம்பிக்கையை நதியாவுக்கு அந்த மாணவர்கள் தருகிறார்கள். அதற்காக அவர்கள் எதிரிகளிடம் கடுமையாக போராடிய சம்பவங்கள் பரபரபர.
இந்த மாதிரி அன்பான ஆசிரியை கிடைத்தால் நாம் கூட ஜெயிக்கலாம் என்ற நம்பிக்கையை தருகிறார் நதியா. அந்தளவுக்கு அந்த கதாபாத்திரமாகவே மாறி மாணவர்களின் குறும்பை ரசிப்பதாகட்டும், பிரச்சனைகளை எடுத்துச் சொல்வதாகட்டும் எல்லா இடங்களிலும் ஸ்கோர் செய்கிறார்.
எட்டு பசங்களும் எமன்டா என்கிற அளவுக்கு கேமிரா பயம் இல்லாமல் அனாயசமாக நடித்திருக்கின்றனர். அதிலும் காதல் கொள்ளும் அந்த இளசுகள் அடடா... அடடடா... பிரமாதம். கண்டிடப்பான ஆசிரியராக வரும் பாலகிருஷ்ணனின் நடிப்பு படு எதார்த்தம். பல ஆசிரியர்களை ஞாபகப்படுத்துகிறார்.
அருண், பாலாஜி, விகாஷ், சுரேஷ், குரு, ஹரி, விக்னேஷ், இர்ஃபான் என இவர்களது பேச்சும், குறும்பும், சிரிப்பும் படத்தை போரடிக்காமல் அழைத்துச்செல்கிறது.
ஜாஸிஹிப்ட் இசையில் அறிமுக பாடலாசிரியர் நெல்லைபாரதியின் இஸ்பக ராரா பாடல் பட்டையை கிளப்புகிறது. குழந்தைகளையும் சுண்டி இழுக்கும் பாடல் அது. அதே போல கலர்புல் காட்சிகளாக படத்தை காட்டுகிறது கிருஷ்ணசாமி கேமிரா.
இளசுகளின் மன ஓட்டங்களை கண்களால் பதிவு செய்து கதையாக்கியிருக்கிறார் ஷீபா ரோஷன். நதியா போல நல்ல ஆசிரியை. பசங்களின் பேச்சுக்களை அப்படியே வசனமாக்கியிருக்கிறார் மோனா. பழனிச்சாமி. இன்னும் நகைச்சுவை இருந்திருக்கலாம்.
பல காட்சிகளில் நம் இளவயதை ஞாபகப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் ரோஹன் கிருஷ்ணா. படம் முழுக்க கூத்தும் கும்மாளமுமாக இருக்கிறது. அதில் ஒன்று சேர்ந்தால் வெற்றி பெற முடியும் என்ற கருத்தும் சொல்லியிருக்கிறார்.
No comments:
Post a Comment